This Thamizh poem, ஆழி மயிலே (Aazhi Mayiley) is about a love lost – dwelling on what it was and what it could’ve been and the sense of grief that comes with it.

ஆழி மயிலே
ஆடி மறைந்தாயே
என் பின் கேட்ட குரல் நீ
என் முன் விழுந்த நிழல் நீ
என் பேர் சொல்லும் முன்பே
என் பேர் சேர்ந்தாயே
ஆழி மயிலே
ஆடி மறைந்தாயே
என் முன் உன் கூந்தல்
வாதை தரும் தென்றல்
என் முன் உன் கால்கள்
பாதை தேடும் விழிகள்
ஆழி மயிலே
ஆடி மறைந்தாயே
என் சொல் வரும் முன்பே
உன் சொல் கேட்டேனே
உன் சொல் நீங்கும் போதே
என் சொல்லும் மறந்தேனே
ஆழி மயிலே
ஆடி மறைந்தாயே
என்னில் இணைந்தாயே
நாமாய் சேர்ந்தோமே
என்னில் நீயும்
உன்னில் நானும்
உன்னில் தொலைந்தேனே
என்னை தொலைத்தாயே
யாரை சேர்வாயோ
என்னில் வாழ்வாயோ
ஆழி மயிலே
ஆடி மறைந்தாயே

Siva Wright
Siva is a literature student trying to cope with life, one poem at a time.